Disclaimer: The information contained herein has been obtained
from sources, which we believe reliable and accurate.
If there is any inaccuracies are found, it would be greatly
appreciated if it is informed to the
webteam as soon as possible.
|
Obituary Notice of Mr. Murugesu Kanapathipillai
(Kanapathipillai Master)
தோற்றம்: May 04, 1921 |
மறைவு: July 07, 2019 |
We regret to inform that Mr. Murugesu Kanapathipillai passed away on Sunday, July 07, 2019 in Harrow (UK) at the age of 98. Mr. Murugesu Kanapathipillai had been a committed teacher of Hartley College for many years. Funeral is to be held on Sunday, 14 July 2019 in Harrow, UK.
At this difficult time, joining with the Global Hartleyites, we pay our tribute to our former teacher. May his soul be blessed and rest in peace.
Please refer to the information below for funeral details and follow the attached link to see the full obituary notice.
திரு முருகேசு கணபதிப்பிள்ளை (வித்துவான்)
B.A (Cey) Dip in Tamil (Peradenia) Vidvan (Annamalai University)
இளைப்பாறிய ஆசிரியர்: பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ் இந்துக் கல்லூரி, நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி மற்றும் கொழும்பு சென்ற் செபஸ்தியன் கல்லூரி
அல்வாய்(பிறந்த இடம்) / பருத்தித்துறை / London (United Kingdom)
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கணபதிப்பிள்ளை அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(கனகம்மா- இளைப்பாறிய ஆசிரியை வட இந்து மகளிர் கல்லூரி- பருத்தித்துறை) அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமா, சிறீதரன், மனோகரன், சசிதரன், வனஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, வல்லிபுரம், கந்தையா, சின்னத்தம்பி, சிவகுரு மற்றும் கண்ணகைப்பிள்ளை(பிரித்தானியா), நாரயணமூர்த்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரன் (Trustee, HCPPA UK), விஸ்ணுகுமார், ரமணி, தேவகி, சுசீலை ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சீதா சிந்துஜன், தருண், நித்திலன், சண்முகன், வருணன், செந்தூரன், ஆதிரை, தாரகா, காருண்யா, வேணிலன், விசாலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Address:
144 Canterbury Road, Harrow HA1 4PB, UK
Google Maps for the Address
Rituals / கிரியை:
Sunday, 14 July 2019 -- 9:30 AM - 12:30 PM
Old Lyonian Sports and Social Club
74, Pinner View, Harrow HA14QD, UK.
Google Maps for Old Lyonian Sports and Social Club
Cremation / தகனம்:
Sunday, 14 July 2019 -- 2:00 PM - 2:45 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
Google Maps for Hendon Cemetery & Crematorium
Lunch / மதிய போசனம்:
Sunday, 14 July 2019 -- 4:00 PM
Old Lyonian Sports and Social Club
74, Pinner View, Harrow HA14QD, UK.
Google Maps for Old Lyonian Sports and Social Club
தொடர்புகளுக்கு:
புவனேஸ்வரன் - மருமகன்: +447909921678 (Mobile)
சிறீதரன் - மகன்: +447956543044 (Mobile)
மனோகரன் - மகன்: +447891907035 (Mobile)
சசிதரன் - மகன்: +447971861112 (Mobile)
விஸ்ணுகுமார் - மருமகன்: +447968969517 (Mobile)
வாழ்க்கை வரலாறு:
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த அல்வாய் பருத்தித்துறையில் 04/MAY/1921 இல் திரு.திருமதி முருகேசு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.கணபதிப்பிள்ளை அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு திருமதி கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் ஆசிரியை பரமேஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக பிறேமா, சிறீதரன், மனோகரன், சசிதரன், வனஜா போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து புவனேஸ்வரன், விஸ்ணுகுமார், ரமணி, தேவகி, சுசீலை போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து சீத்தா சிந்துஜன், நித்திலன், சண்முகன், வருணன், செந்தூரன், ஆதிரை, தாரகா, காருண்யா, வேணிலன், விசாலி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
மேலும் வித்துவான் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் B.A(cey) Dip in tamil(peradeniya) vidvan (annamalai university) போன்ற உயர் பட்டம் முடித்த இவர் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி,நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்,யாழ்.இந்துக் கல்லூரி,நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி,மற்றும் கொழும்பு சென்ற் செபஸ்தியன் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியக் கடமை ஆற்றி ஓய்வு பெற்றதுடன் தன்நலமற்ற சமூக சேவையாளரும்,எல்லோர் நெஞ்சங்களிலும் அழியாத அன்பை விதைத்தவர். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்.
இவ்வாறு மனைவி மற்றும் பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 07.07.2019 இல் 98 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
கல்வியில் சிறந்தகாலச் சூரியனே
எங்கும் சுழண்ற அறிவுச் சூறாவளியே
பல் எண்ண வித்துவானே
பாரில் போற்ற பா எதற்கு
பைந்தமிழ் சிஷ்யர் பல உண்டு
நாமம் கூறி நன்றி உரைத்திட
|
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Information from:
https://www.ripbook.com/30429032/notice/102108
Mr. S. Sathaimoorthy (Toronto, Canada)
Mr. Harri. P. Harrichandiran (HCPPA, UK)
Mr. Arul Arulnanthy (Chairman, HCPPA UK Trustee)
Mr. Tharani Thanga (President, HCPPA Canada)
|